ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.
இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்துள்ளதால் சிறப்பு வாய்ந்ததாக கருதும் பக்தர்கள், அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர்.
காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் நீராடி, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து சென்றனர்.