(15.8.2023) சென்னை, தலைமைச்‌ செயலகக்‌ கோட்டை முகப்பில்‌ நடைபெற்ற சுதந்திரத்‌ திருநாள்‌ விழாவில்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌, டாக்டர்‌ ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்‌ விருது, கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின்‌ நல்‌ ஆளுமை விருதுகள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌ நலனுக்காக மிகச்‌ சிறந்த சேவை புரிந்தோருக்கான விருதுகள்‌, மகளிர்‌ நலத்திற்கான சிறந்த சேவைக்காக தொண்டாற்றியவர்களுக்கான விருது, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர்‌ விருதுகள்‌, முதலமைச்சரின்‌ மாநில இளைஞர்‌ விருதுகள்‌, காவல்‌ பதக்கங்கள்‌ ஆகிய தமிழ்நாடு அரசின்‌ விருதுகளையும்‌, பதக்கங்களையும்‌, பாராட்டுச்‌ சான்றிதழ்களையும்‌ பெற்றவர்கள்‌ குழு புகைப்படம்‌ எடுத்துக்‌ கொண்டனர்‌. உடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, இ.ஆ.ப, உள்ளார்‌.