மதுரையில் எழுச்சி மாநாடு நடக்க இருக்கும் நிலையில் சென்னையிலிருந்து ஒரு தொடர் ஓட்டம்,கிட்டதட்ட 500 கிலோ மீட்டர்,ஒரு நாளை 60 கிலோ மீட்டர் வரை இந்த தொடர் ஓட்டத்தைக் கழகத்தின் சகோதரர்கள்,மாவட்டச் செயலாளர் அசோக் தலைமையிலே நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இன்றைக்கு நம்முடைய பொதுச்செயலாளரால் தொடர் ஓட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி– காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்த கருத்து குறித்து

பதில்—காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு,ஏற்கனவே கழகத்திலிருந்து அதன் மூலம் புரட்சித்தலைவரால் அடையாளம் காட்டப்பட்டு யார் என்று தெரிந்தவர்.அதேபோல புரட்சித்தலைவி அம்மாவால் யார் என்று அடையாளம் காட்டப்பட்டவர். திருநாவுகரர் என்ற மனிதர் இந்த உலகத்திற்குத் தெரிகிறார் என்றால்,அவர் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டிருக்கவேண்டியது கழகத்திற்குத்தான். ஆனால் அதனைவிடுத்து இன்றைக்கு உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்கின்ற வேலையை அவர் செய்யவேண்டாம். திரும்பவும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்ற நப்பாசை அவருக்கு இருக்கும். அதற்காக ஒரு வரலாற்றுச் சம்பவத்தை மறைத்து ,உண்மைக்கு புறப்பாக ஒரு பொய்யைச் சொல்வது என்பது உண்மையிலே ஒவ்வொரு கழக தொண்டனும் இப்படிப்பட்டவர் கழகத்திலே இருந்துள்ளார் என்பதை நினைத்து வருத்தப்படக்கூடிய விஷயமாகத்தான் நிச்சயமாக இருக்கும். 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி அந்த சம்பவம் நடக்கும்போது உடனடியாக நாங்கள் தலைமைச் செயலகம் சென்றோம். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் வேட்டையாடப்பட்டு சிறையிலிருந்தோம்.அன்றைக்கு ஒரு பெண் என்றும் பாராமல் தலை முடியைப் பிடித்து இழுத்து,அடித்து காலல் எட்டி உதைத்து,எந்த அளவுக்குத் துன்பத்தைத் தர முடியுமே அந்த அளவுக்குச் செய்தார்கள்.மைக்கை ஆப் செய்துவிட்டு காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு ,உயிரே போய்விடும் நிலையிலே சட்டமன்றத்திலிருந்து அம்மா வெளியேறினார்.இது தொடர்பான செய்திகள் அன்றைக்குப் பத்திரிக்கையில் வந்துள்ளது.இதே திருநாவுக்கரசர் அன்றைக்கு என்ன திருவாய் மலர்ந்துள்ளார்

எங்களைத் தாக்கிவிட்டு,நாங்கள் தாக்கியதாகச் சொல்வது கருணாநிதியின் கற்பனை.துச்சாதனர்கள்,துரியோதனர்கள்.துரியோதனர்கள் என்று கருணாநிதியைக் குறிப்பிடுகிறார்.துச்சாதனர் யார் என்றால் துரைமுருகன்..துச்சாதனர்கள்,துரியோதனர்கள் விரைவில் அழிவார்கள்.இந்த கருத்தைத் தெரிவித்தது திருநாவுக்கரசர். முதல் மந்திரியை அடிக்கவோ,அவரின் கண்ணாடியை உடைக்கவோ யாரும் செல்லவில்லை. எங்களை தாக்கும்படி கூறிவிட்டு கருணாநிதி சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடைபெற்றவுடன் சமாதானம் செய்யவந்த காங்கிரஸ் தலைவர்கள் மூப்பனார்,குமரி ஆனந்தன் ஆகியோருக்கு செருப்படி விழுந்தது. கருணாநிதி ஆபாச வார்த்தைகளால் திட்டினார். கையில் வைத்திருந்த பட்ஜெட் கட்டுகளால் எங்களை அடித்தார்கள். புரட்சித்தலைவியின் சேலையை மந்திரி துரைமுருகன் பிடித்து இழுத்தார். மந்திரிகள் எல்லோரும் துச்சாதனர்களாக நடந்துள்ளார்கள். ,இப்படித் தெரிவித்தவர் திருநாவுக்கரசர்.இந்த உண்மையை மறைத்து,திரித்து இன்றைக்கு அவர் எம்.பி.பதவி கூட்டணியில் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற வேலையை திருநாவுக்கரசர் செய்துவருகிறார் என்று உலகத்திற்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவும்,வரலாறு மறைக்கப்படக்கூடாது என்பதற்காக இதனைத் தெரிவிக்கின்றோம்.இப்படி சட்டமன்ற மரபுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு,,எந்த அளவுக்கு அம்மாவை அவமானப்படுத்த முடியுமே அப்படிச் செய்தவர்கள்தான் துச்சாதனர்,துரியோதன கும்பல்.அந்த சமயத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நான் மீண்டும் இங்கு வந்தால் முதல்வராகத்தான் வருவேன் என்று சபதம் ஏற்றார். முதலமைச்சராகச் சபைக்கு வந்தவர் அம்மா. திருநாவுக்கரசு திருத்தி கூறியதால் இந்த கருத்தை நான் தெரிவிக்கிறேன்.

கேள்வி—-நீட் என்ற தடுப்புச் சுவர் இன்னும் சில நாட்களில் இடிந்து விழும் என்ற தமிழக முதலமைச்சரின் அறிக்கை வெளியிட்டுள்ளாரே.

பதில்—காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்து கொண்டு நீட் தேர்வைக் கொண்டு வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அவற்றை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள் திமுகவினர். 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப் புரட்சித்தலைவி அம்மா முயற்சித்த பொழுது, மண்டல ஆணையம் 50 சதவீத விழுக்காட்டுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தார்கள். ஆனால் சட்ட ரீதியாகப் போராடி 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது தான் கழகத்தின் சாதனை மூக நீதிக்குச் சொந்தக்காரர்கள் கழகத்தினர்தான்.

நாங்குநேரி மாணவர்களுக்கு நேர்ந்துள்ள சம்பவம் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. தென் மாவட்டங்களில் இது போல் நடைபெறும் சாதியைத் தாக்குதல்கள் கழக ஆட்சியில் ஒருபோதும் நடந்ததில்லை. கழக ஆட்சியில் சிறு தாக்குதல்கள் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காததால்தான் தொடர் நிகழ்வுகள் இதுபோல் நடப்பதாக நடக்கின்றது. குறிப்பாக திமுக ஆட்சியில் தான் தென் மாவட்டங்களில் அதிக அளவில் சாதிய தாக்குதல்களும், மோதல்களும் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கத்தி, கஞ்சா, கூஜா வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்துவிடுகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.