சுதந்திர தினத்தை முன்னிட்டு விஐ நிறுவனம் ஆகஸ்ட் 18 வரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.3,099 திட்டத்தில் தினமும் 2ஜிபி, 100 எஸ்எம்எஸ், அன்லிமிட்டட் வாய்ஸ்கால், 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ரூ.75 தள்ளுபடி, ஓடிடி நன்மைகள் கொடுக்கப்படுகிறது. இதனுடன் நள்ளிரவு 12 – காலை 6 மணி வரை இலவச டேட்டா பயன்படுத்தலாம்.