கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டத்தால், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஓட்டுநர்கள் நியமிக்காத நிலையில், ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் ஏஜென்சிகள் மூலம், 500 தற்காலிக ஓட்டுநர்களை நியமிக்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளது.