கேராளா, வயநாடு கல்பெட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி எம்பி, “4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் என் தொகுதி மக்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் இக்கட்டில் சிக்கித் தவித்த போது, வயநாடு என்னை பாதுகாத்து, ஆதரவளித்தது. பாஜக அரசு என்னை எத்தனை முறை பதவி நீக்கம் செய்தாலும், எனக்கும், வயநாடுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது” என்றார்.