மேற்கு வங்கத்தில் ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாதவ்பூர் பல்கலையில் படித்த முதலாம் ஆண்டு மாணவர் ஸ்வப்னோதீப் குண்டு (18), ராகிங் டார்ச்சரால் விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை விசாரணையில், சில மாணவர்கள் மொட்டை மாடியில் நிர்வாணமாக ஓட கட்டாயப்படுத்தியது தெரியவந்தது.