“தமிழ்நாட்டில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-24) நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ இணையத்தின் வாயிலாக இன்று (ஆக. 14) முதல் வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்” என கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா கூறியுள்ளார்.