தெலங்கானா, ஐதராபாத் அருகே உள்ள ஹக்கிம்பேட் நகரில் உள்ள மாநில விளையாட்டு பள்ளியில் மூத்த அதிகாரி ஒருவர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக அம்மாநில விளையாட்டுதுறை அமைச்சர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.