தமிழ்நாட்டில் அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு ஆகிய 10 நிலையங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். இங்கு வெளிமாநில ரயில்கள் அதிகம் வந்து செல்வதால் குற்றங்கள் அதிகரிக்கின்றன. அதனால் கூடுதல் கண்காணிப்பு பணி மேம்படுத்தப்பட உள்ளது.