தாம்பரம் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்டு 18 மாதங்கள் ஆன தாம்பரம் மாநகராட்சி தமிழக அரசினால் இரண்டாவது தலைசிறந்த தாம்பரம் மாநகராட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் மற்றும் நமது தாம்பரம் மாநகராட்சியின் ஆணையாளர் அழகுமீனா, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் மரியாதை நிமித்தமாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.