13.08.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய 323 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவதை ஒட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மற்றும் சிட்லபாக்கம் முன்னாள் பேரூர் கழக செயலாளர் மனோகரன் தாம்பரம் மாநகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 23 வது வட்ட கழக செயலாளர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஏ. ரங்கநாதன் தலைமையில் 23 வது வட்ட கழக நிர்வாகிகள் மாணவரணி, இளைஞர் அணி புடை சூழ மாநகர செயலாளர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கழக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நமது மாநகர செயலாளர் அவர்களுக்கு கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கழக நிர்வாகிகள் அனைவரும் சால்வை அணிவித்து மாநகர செயலாளர் உடன் அன்பை பகிர்ந்து கொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு 23 வது வட்டக் கழக அலுவலக வளாகத்தில் ஆயிரம் பேருக்கு சிறப்பான அன்னதானம் வட்டக் கழகச் செயலாளர் அண்ணன் ஏ.ரங்கநாதன் அவர்களின் ஏற்பாட்டில் மாநகர கழக செயலாளர் அவர்களின் திருகரங்களால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.