சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தோகா, துபாய், சார்ஜா, அந்தமான் புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

துபாய், சார்ஜா, துருக்கி நாடுகளில் இருந்து வந்த 3 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூரு சென்றது.