உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணம் நீட் பலிபீடத்தின் இறுதிமரணமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஜெகதீஸ்வரன் போன்று எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.