உத்தரகண்டில் உள்ள தெஹ்ரி, டேராடூன், பவுரி, சம்பவத், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிக அதிக கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரித்வார் மாவட்டத்தில் கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம். மழையால் இதுவரை அங்கு 60 பேர் பலியான நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர்.