
தமிழ்நாட்டில் 100 புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிறப் பேருந்துகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் மஞ்சள் நிறம் மட்டுமில்லாமல் பேருந்தின் இருக்கை மற்றும் அமரும் வசதி போன்ற வசதிகளும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் ரூ.500 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.