குரோம்பேட்டை பத்மநாபா நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி (13-08-23) மதியம் சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல், அன்னதானம் நடைபெற உள்ளது. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு கருமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.