ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்தது.

4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து 20 சாட்சியங்கள் விசாரித்து அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு, ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருந்தது.