என்எல்சி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் என்எல்சிக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும் தான் என உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்தார். நிலக்கரி தீர்ந்துவிட்டால் நிலம்கொடுத்த தொழிலாளர்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்ப தயங்கமாட்டார்கள். தொழிலாளர் – என்எல்சி பிரச்னைக்கு தீர்வுகாண மத்தியஸ்தரை நியமிப்பது பற்றி மத்திய அரசு 22ல் கூறவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.