
இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லசின் முடிசூட்டலைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் 50 பென்ஸ் சிறப்பு நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாணயம் மன்னரின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள 2வது நாணயம் என்பது குறிப்பிடத்தக்கது.