ரஷ்யாவின் லூனா-25 என்ற விண்கலம் சோயுஸ்-2 ராக்கெட் மூலம் இன்று(ஆக.11) விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 47 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா இந்த விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷ்ய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.