2015ஆம் ஆண்டு முதல் அடல் ஓய்வூதிய திட்டம் செயல்பட்டு வருகிறது. 18 வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ள யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். 60 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1,000 முதல் 5,000 வரை பென்ஷனாக பெறலாம். பென்ஷன் தொகைக்கு ஏற்ப மாதம் ரூ.42 முதல் செலுத்த வேண்டியது இருக்கும்.