சென்னை, கோயம்பேடு சந்தையில் இன்று(ஆக.11) தக்காளி விலை மேலும் குறைந்துள்ளது. முதல் தர தக்காளி நேற்று(ஆக.10) ரூ.70 ஆக இருந்த நிலையில், ரூ.10 குறைந்து இன்று ரூ.60க்கு விற்பனையாகிறது. 2ம் ரக தக்காளி ரூ.50க்கும், 3ம் ரக தக்காளி ரூ.20க்கும் விற்கப்படுகிறது. ரூ.200க்கு விற்று வந்த தக்காளி விலை மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.