கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 2 நாள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திட்ட செயலாக்கத்துறை செயலர் தினேஷ் அகமது, “மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு ஆகஸ்ட் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.