ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புடினின் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்திற்கும் வுனுகோவோ விமான நிலையத்திற்கும் இடையிலுள்ள ஒடின்ட்சோவோ நகரில் கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதிபர் இல்லத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் எப்படி தீ பிடித்தது என பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.