பஞ்சாப்பின் டர்ன் தரான் பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (ஆக.11) அதிகாலையில் பாகிஸ்தானியர் ஒருவர் இந்த எல்லைப் பகுதியில் நுழைய முயன்றார். பாதுகாப்பு வீரர்கள் எச்சரித்தும் அவர் எல்லை வேலியை நெருங்கி வந்ததால், துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.