பிரபல நடிகையும், முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது எழும்பூர் நீதிமன்றம். இவர் சென்னை அண்ணாசாலையில் நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.