சென்னை, தி.நகரில் கூட்ட நெரிசலை சமாளிக்க மிக நீளமான பாலம் 2024ல் கட்டப்பட உள்ளது. ஹைப்ரிட் மேம்பாலமாக அமையவுள்ள இந்த பாலம், அண்ணா சாலையை நேரடியாக சிஐடி நகர் வழியாக மகாலிங்கபுரத்துடன் இணைக்கும். இதனால் இதற்கு இடைப்பட்ட தூரத்தை கடக்க 30 நிமிடங்கள் ஆகும் நிலையில், மேம்பாலம் கட்டிய பின் 5 நிமிடங்களில் திநகர் டிராபிக்கை கடக்கலாம்.