திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் உள்ள கோசலை பகுதியில் அமைந்துள்ள வள்ளலார் விவசாய பண்ணையில் விவசாயிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டில் 7% இருந்த அரிசி உற்பத்தி தற்போது 5.2%ஆக குறைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உற்பத்தியை மேம்படுத்த ரசாயன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தியதன் காரணமாக மண்ணின் தன்மை குறைந்து விட்டது” என்றார்.