நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் நேற்று(ஆக.10) வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ‘ஜெயிலர்’ இந்தியாவில் ரூ.49 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் ரூ.23 கோடியும், கர்நாடகாவில் ரூ.11 கோடியும், கேரளாவில் 5 கோடியும், ஆந்திரா – தெலங்கானா ரூ.10 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.