தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 7, 8ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகும் என முதல்வர் கூறினார்.