செங்கல்பட்டு, பொத்தோரியில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பித்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.