
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று, நடிகையும் ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா, சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் தரிசனம் முடிந்து கோயில் வெளியே வந்தபோது வயதில் மூத்த 2 பெண்கள் பரிசுகள் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.