ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், “பக்தர்களின் பங்களிப்புடன் கோயில் திருவிழா நடக்க வேண்டும். ஆகஸ்ட் 16ம் தேதி மட்டும் காலை 6 – மாலை 3 மணி வரை பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அன்னதானம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.