குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன்
தங்க கிரீடம் வழங்கினார்

கேரள மாநலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனுக்கு காணிக்கையாக இன்று 14 லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க கிரீடத்தை துர்கா ஸ்டாலின் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவஞானம் என்பவர் செய்தார். 32 பவுன் எடை கொண்ட தங்க கிரீடம் – சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை கோவிலுக்கு வழங்கினர்.

இயந்திரத்தின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இன்று பகல் 11.35 மணிக்கு துர்கா ஸ்டாலின் கோவிலுக்குள் சென்று இதனை காணிக்கையாக வழங்கினார். முன்னதாக கிரீடம் தயாரிப்பதற்கான அளவு, கோவிலில் இருந்து வாங்கப்பட்டது. துர்கா ஸ்டாலின் ஏற்கனவே பலமுறை குருவாயூர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார்.