சென்னை: தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை நடப்பு கல்வியாண்டில் (2023-24) நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in, www.tngasa.org ஆகிய வலைதளங்கள் வாயிலாக ஆகஸ்ட் 14 முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் ‘The Director, Directorate of collegiate education, chennai-15’ என்ற பெயரில் வரைவோலை எடுத்து செலுத்தலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களை அறிய 9363462070, 9363462042, 9363462007, 9363462024 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.