சென்னை ஆக, 10

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் 100 பேருக்கு வீடு வழங்க நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் வரும் மாதத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.