நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற காரணங்களால் பெரும்பாலான நாட்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் (ஆக. 11) கூட்டத்தொடர் முடிவடைகிறது.