ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளி மிக சிறப்பு வாய்ந்தது. கடைசி வெள்ளிக்கிழமையான இன்று (ஆக.11) விரதம் இருப்பது குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாக்கும். காலை எழுந்ததும் அம்மனுக்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலை பால்பாயாசம் அல்லது சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்து வைத்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் வீட்டில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.