டில்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை திமுக எம்பி கனிமொழி நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, “மதுரை – தூத்துக்குடி இடையிலான 143.5 கிமீ தொலைவு கொண்ட இரண்டாவது ரயில்பாதை பணிகளை நிறுத்தாமல், தேவையான நிதி ஒதுக்கித் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.