
இது குற்றவாளிக்கு சாதகமான சூழலை உருவாக்கி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே முறைகேடாக முடிக்கப்பட்ட வழக்கை தானே தானாக Suomoto வாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் ஆனந்த வெங்கடேசன் கூறியுள்ளார்.
நீதிமன்றத்திற்கு அவமானம் உண்டாக்கும் வகையில் முறைகேடு செய்துவிட்டு பொன்முடிக்கு சாதகமாக முடித்த முந்தைய நீதிபதியை சாடியுள்ளார். தற்போது இந்த வழக்கை Suomoto வாக விசாரிக்க துணிந்திருக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேசன்.
பொன்முடி மீதான ஊழல் வழக்கில் அசிங்கமான விசாரணையால் சென்னை நீதிமன்றத்தின் நீதி பரிபாலனம் தவறியுள்ளது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ஆனந்த வெங்கடேசன்.
குற்றவிசாரணை நடைமுறை என்பதையே கேலிக்கூத்தாகி உள்ளது பொன்முடி ஊழல் வழக்கு என்கிறார் ஆனந்த வெங்கடேசன்.
பொன்முடி மீதான ஊழல் வழக்கை அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் 172 சாட்சிகளை நான்கே நான்கு நாளில் அவசர அவசரமாக விசாரித்து தீர்ப்பு சொல்லி விட்டு
அதற்கடுத்த 2வது நாளில் ஓய்வு பெற்றுக் கொண்டு போய்விட்டார் அந்த நீதிபதி என்று சாடியுள்ளார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன்
இவ்வாறு ஒரு நீதிபதி அளித்த ஊழல் வழக்கு தீர்ப்பை
எவ்வித புகார்களையும் யாரும் கொடுக்காத பட்சத்தில் இன்னொரு நீதிபதி சுயமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வேன் என்று அறிவிப்பது தமிழ்நாட்டு ஊழல் வழக்கு வரலாற்றில் திடுக்கிடும் திருப்புமுனை என்றால் மிகையில்லை.
இது தமிழ்நாட்டுக்கு வெறும் அதிர்ச்சி என்பது மட்டும் அல்ல பாரம்பரியம் மிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்படி ஒரு ஊழல் வழக்கில் நீதிபதி ஒருவர் ஊழல்வாதிகளுக்கு உடந்தையாக இருந்து தீர்ப்பு சொல்லியுள்ளார் என்கிற செய்தி நீதிமன்றத்துக்கு இழுக்கு சேர்க்கும் விஷயம்.
இதை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து நெஞ்சுக்கு நீதி என்கிற துணிச்சல் மிக்க நீதிபதி ஆனந்த வெங்கடேசன் பாராட்டுக்கு உரியவர்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மாண்பு சரிவதை மாற்றி அதன் மதிப்பை தூக்கி நிறுத்த துணிந்த வீரமும்
நீதியும் அவருக்கென்று ஒரு தனியிடத்தை நீதிநூல் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் என்றால் அது மிகையில்லை.
சத்தியம் என்றும் சாகாது.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
அறமே வடிவாய் வந்த நீதியரசர் ஆனந்த வெங்கடேசன் பெருமைக்குரியவர்.
வாழ்க வளமுடன்
அவர்
வாழ்க பல்லாண்டு