பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவி 2 நாட்கள் பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று சென்றார். இந்நிலையில், இன்று (ஆக. 11) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.