முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் – பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக #AsianChampionshipTrophyChennai ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு “பொம்மன்” என பெயர் சூட்டினோம்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் – பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.