மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்;

மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெரும்பான்மையுடன் 2 முறை மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளது.

குடும்ப அரசியல், எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் அகற்றி உள்ளார்.

2014ம் ஆண்டு முதல் வளர்சிக்கான இந்தியாவை நரேந்திரமோடி உருவாக்கி உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது.

சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ்.

நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், மக்களுக்கு அனைத்தும் தெரியும்.

நரேந்திர மோடி பிரதமரான பிறகே கோடிக்கணக்கான ஏழை மக்கள் வளர்ச்சியை கண்டனர்.

நாட்டு மக்களுக்காக பிரதமர் ஓய்வில்லாமல் நாளொன்றுக்கு 17 மணிநேரம் உழைத்து வருகிறார்.

ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்த 13 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காங்கிரஸை போல் ஊழல் செய்யாமல், மக்களுக்கு சேர வேண்டிய உதவித்தொகையை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம்.

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பரப்புரை செய்தவர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்.

இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறார்.

உலகளவில் அதிகம் மதிக்கப்படும் தலைவர் பிரதமர் நரேந்திரமோடி

  • மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு.