சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி குழந்தையை மாடு முட்டிய காட்சி வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி பகுதியில் உள்ள இளங்கோ தெருவில் நேற்று பள்ளி சென்ற சிறுமி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இரண்டு மாடுகள் அந்த சிறுமியை முட்டி தள்ளின.
சில நிமிடங்கள் வரை யாரும் நெருங்க விடாமல் அந்த சிறுமியை அந்த மாடு முட்டி தள்ளிக் கொண்டு இருந்தது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அந்த மாட்டை விரட்டினார்கள்.
நல்ல வேளையாக சிறுமிக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. காயத்துடன் அந்த சிறுமி உயிர் பிழைத்தார். சென்னையில் சாலை பகுதிகளில் மாடுகள் திரிவது சௌக்கியமாய் வருகிறது சென்னை நகருக்குள் மாடு வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை அரசு சார்பிலும் சரியான முறையில் நடவடிக்கை எடுப்பதில்லை. சென்னை மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் இதுபோன்று சாலைகளில் மாடு தெரிவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் குரோம்பேட்டையில் மாடு முட்டியதால் இருசக்கர வண்டியில் இருந்த ஒரு பெண் வாகனம் மோதி பலியானார். மாடுகள் தவிர நாய்கள் தொல்லையும் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டுகின்றன. இதனால் முதியவர்கள் பெண்கள் பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமியர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மாடுகள், நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சியினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.