சேலையூர் அடுத்த மப்பேட்டில் உள்ள தனியார் பள்ளியில
மாணவர்களிடம் தன்நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் டாக்டர் சீனி சவுந்தரராஜன் அவருடைய தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
இதனை முன்னிட்டு கபில் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 1000 ஆயிரம் மாணவர்கள் கபில் ரிட்டர்ன்ஸ் வடிவில் நின்று உலகசாதனை படைத்தனர்.
இதனை ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனம் அங்கிகரித்து படத்தின் இயக்குனர் சீனி சவுந்தரராஜனுக்கு, ஐன்ஸ்டின் உலக சாதனை நிறுவனர் கார்த்திக்குமார் மற்றும் முதன்மை ஆசிரியர் மோனிகா ரோஷினி ஆகியோர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் படத்தின் இயக்குனரும் நடிகருமான சீனி சவுந்தரராஜன் கூறுகையில்,
மாணவர்களின் கனவுகளை நினைவாக்க கூடிய சூழல் குறித்து இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கு ஒரு நல்ல தன்நம்பிக்கை படமாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.