தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் 9.70 லட்சம் செலவில் புதிய ஆர்.ஓ சுத்திகரிக்கபட்டகுடிநீர் நிலையம் திறப்பு விழா
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு தெற்கு தெருவில் மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்லாவரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.70 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆர்.ஓ. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, பல்லாவரம் 2 வது மண்டல குழுத் தலைவர் ஜோசப்அண்ணாதுரை கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்தும், சுத்திகரிக்கபட்ட குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர். இதனால் குடிநீர் தட்டுபாடின்றி பொதுமக்கள் பயன்பெறுவர். உடன் இந்நிகழ்ச்சியில், 26 வார்டு மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் ,26 வட்டகழக செயலாளர் முஜிப்பூர்ரகுமான், மற்றும் மதிமுக மாவை மகேந்திரன்,குரோம்பேட்டை நாசர், கரன்சிங், மற்றும் மகளிரணி உட்பட தெற்கு பகுதிகழக நிர்வாகிகள், மற்றும் திமுக,மதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.