வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால், வாக்காளர் பட்டியலை வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணி, கடந்த மாதம் 21-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு வரும் 21-ந் தேதி வரை நடைபெறும்.
வாக்காளர்கள் தங்கள் விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மற்றும் புதிய வாக்காளர்களை இணைக்க விரும்பினால், அவரவர் வீட்டிற்கு வரும் அலுவலர்கள் மூலமாக செய்துக் கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமைத் தேர்தல் அதிகாரி
தமிழ்நாடு