தமிழ்நாட்டின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து இன்று வரை கட்டவில்லை. இந்நிலையில், “2026 மே மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். ரூ.2,600 கோடி செலவில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.