மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவினை திறந்து வைத்து, அதற்கான இலச்சினையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர்.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாச ரா.ரெட்டி, வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் காஞ்சனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.